தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிராம விருந்து உண்ட நூற்றுக்கணக்கானோருக்கு வாந்தி, மயக்கம் - உத்தர பிரேத கோவில் விருத்து

லக்னோ: உத்தரப் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் உணவு உண்ட 250க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

uttar pradesh latest news
uttar pradesh latest news

By

Published : Feb 11, 2020, 12:54 PM IST

உத்தரப் பிரதேசத்தின் படான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை உகாட்டி பகுதியுள்ள தியோரி அமிர்த்பூர் என்ற கிராமத்தில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் உணவு உண்ட சுமார் 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் அளித்துள்ளதாக படான் மாவட்ட நீதிபதி குமார் பிரசாந்த் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 25 பேரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

450 பேர் இந்த விருந்தில் கலந்துகொண்டவர், அவர்களில் சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தக் கிராம விருந்து விழாவில் உணவு உட்கொண்ட பின், பலருக்கு வாந்தி, வயிற்று வலி ஆகியவை இருப்பதாக புகார் தெரிவித்ததாக மாவட்டத்தின் தலைமை சுகாதாரத் துறை அலுவலர் பி.வி. புஷ்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மலேரியாவை ஒழிக்க கூட்டணி அமைத்த எம்.பி.க்கள்!

ABOUT THE AUTHOR

...view details