தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவமனை வளாகத்தில் மனித எலும்பு பாகங்கள்  கண்டெடுப்பு! - முசாஃபர்பூர்

முசாஃபர்பூர்: ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மனித எலும்புக் கூடுகளின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முசாஃபர்பூர்

By

Published : Jun 22, 2019, 3:29 PM IST

இது குறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர். எஸ்.கே. சாஹியிடம் பேசியபோது, ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையின் உடற்கூறாய்வு கிடங்கு தலைமை மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளது. அதேபோல் உடற்கூறாய்வு என்பது மனிதத் தன்மையுடன் செய்யப்பட வேண்டும் என்றார்.

எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து அவரிடம் விசாரணை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதால், எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details