தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனித உரிமை விதிகளை மீறுகிறது பாகிஸ்தான் - எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர் - Pak attacks India

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் அப்பாவி மக்கள் பாதிப்படைவதாகவும் அவர்களின் பொருள்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர் ராஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

BSF
BSF

By

Published : Nov 15, 2020, 7:01 PM IST

பாகிஸ்தானின் அத்து மீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் அப்பாவி மக்கள் பாதிப்படைவதாகவும் அவர்களின் பொருள்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ராஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "பாகிஸ்தான் மீது மனித உரிமை பிரச்னை எழுப்பப்பட வேண்டும். நவம்பர் 13ஆம் தேதி, எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் ராகேஸ் தாபோல் எடுத்த நடவடிக்கையின் படி இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால் நவுகம் பகுதியில் பாகிஸ்தான் படையினருக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

மிகவும் துணிவாக போரிட்ட அவர், எதிரி நாட்டு தாக்குதலால் நிலைகுலைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details