புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பாளர்களின் மாநாடு ஜூன் 15ஆம் தேதி நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சிறப்புரையாற்றினார்.
அப்போது, "எதிர்காலங்களில் புலம்பெயர்வோருக்கான சிறந்த வாய்ப்கள் வழங்கவும், அவர்கள் நலன்சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்தும்.
தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் உலகப் பொருளாதாரத்திற்கு நம்பகமான மனிதவளமாக இந்தியா திகழ்கிறது. மேலும், திறமைகள், போட்டித் திறன்களின் ஆதரமாகவும் இந்தியா திகழ்கிறது. இந்த மாநாட்டின் நோக்கம் குடியேற்றம் தொடர்பான கொள்கைகள், நடைமுறைகளில் கவனம் செலுத்துவதாகும். தற்போதுள்ள பெருந்தொற்று காலத்தில் அது முக்கியத்துவம் பெறுகிறது.
இடப்பெயர்வு குறித்த ஒப்பந்தங்கள் மூலம் பயணத்தை எளிதாக்குவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க:சிபிஎஸ்சி மாணவர்கள் பொதுத்தேர்வு: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு திருச்சி சிவா கடிதம்