ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் பரவாடா என்ற பகுதியில், 80க்கும் மேற்பட்ட மருந்துகள் தயாரிக்கும் தனியார் கம்பெனிகள் செயல்பட்டுவருகின்றன. இப்பகுதியில் செயல்பட்டுவரும் ராம்கி குழுமத்துக்குச் சொந்தமான மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில், திங்கள்கிழமை நள்ளிரவு (ஜூலை 13) திடீரென பெரும் சத்தம் எழுந்தது.
இதைக்கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து வான் உயரத்துக்கு மளமளவென தீப்பற்றியது. இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள், ஊழியர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.