தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடிபெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளி சேர்க்கை தொடர்பில் மத்திய அரசின் புதிய வழிகாட்டல்கள்! - பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டல்கள்

டெல்லி : குடிபெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பெயர்களை பள்ளி பட்டியலில் இருந்து விலக்கிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

குடிபெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளி சேர்க்கை தொடர்பில் மத்திய அரசின் புதிய வழிகாட்டல்கள்!
குடிபெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளி சேர்க்கை தொடர்பில் மத்திய அரசின் புதிய வழிகாட்டல்கள்!

By

Published : Jul 14, 2020, 10:07 PM IST

பெருந்தொற்று நோயான கரோனா பரவல் காரணமாக ஒட்டுமொத்த நாடும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் கல்வித் துறையும் முடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

குறிப்பாக நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் பின்பற்றப்பட வேண்டியவை குறித்து, மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், " கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தங்களது சொந்த மாநிலங்களுக்கும், ஊர்களுக்கும் திரும்பிய குடிபெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி பயின்ற பள்ளிகளில் அவர்களது பெயர்களை பட்டியலில் இருந்து நீங்காமல் ஒவ்வொரு பள்ளியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதே போல, பிற மாநிலங்களில் அல்லது அதே மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள குழந்தைகள் குறித்த தரவுகளை உடனடியாக அனைத்து மாநில அரசுகளும் தயாரிக்க வேண்டும்.

அத்தகைய குழந்தைகள் தரவுத்தளத்தில் ' இடம்பெயர்ந்தவர்கள்' அல்லது ' தற்காலிகமாக இருப்பிடம் இல்லை' என்று குறிப்பிடப்பட வேண்டும். இதுபோன்ற ஒரு தரவுத்தளம் ஒவ்வொரு பள்ளியிலும் தங்கள் பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை கைப்பேசி, வாட்ஸ்-அப், அக்கம் பக்கத்தில் உள்ள மற்ற குழந்தைகள் மூலம் தனிப்பட்ட முறையில் கேட்டு தயாரிக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் அவர்கள் தங்கியிருக்கும் தற்காலிக இடமும் குறிப்பிடப்படலாம். குறிப்பாக, இடம்பெயர்ந்த அத்தகைய குழந்தைகளின பெயர்களும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து கவனமும் எடுக்கப்பட வேண்டும் (எப்போது வேண்டுமானாலும் அவர்கள் திரும்புவதற்கான சாத்தியம் இருப்பதால்), மேலும், அவர்களின் எண்ணிக்கை வகுப்பு வாரியாக கல்வி இயக்குநரகத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

மதிய உணவு, பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் போன்ற பாடசாலைகளில் வழங்கப்படும் சமூக நலன்புரி திட்டங்களிலும் அவர்கள் பெயர் நீக்கப்படக் கூடாது. அண்மையில் தங்களது கிராமத்திற்குத் திரும்பிய மாணவர்களிடம் சில அடையாளச் சான்றுகளைத் தவிர வேறு எந்த ஆவணங்களையும் கேட்கக்கூடாது.

அவர்களை எவ்வித ஆட்சேபனையும் இன்றி அனுமதிக்க அனைத்து வகையான பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அவர்களிடம் சான்றிதழ் இல்லை என்றால் அவற்றை தரக்கோரி கட்டாயப்படுத்தக்கூடாது.

குழந்தையின் பெற்றோர் வழங்கிய தகவல்கள் சரியானவை என்று கருதி சம்பந்தப்பட்ட வகுப்பில் குழந்தைகளை சேர்க்கைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இசைவு வழங்கலாம்" என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details