தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளிக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் - மத்திய அமைச்சர் வேண்டுகோள் - School fees

டெல்லி: ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் ஆண்டு கட்டணத்தை உயர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Ramesh Pokhriyal
Ramesh Pokhriyal

By

Published : Apr 18, 2020, 4:00 PM IST

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

"பள்ளிகளின் ஆண்டு கட்டணங்களை உயர்த்துவது மட்டுமல்லாமல், மூன்று மாதங்களுக்கான தொகையை ஒரே நேரத்தில் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் கூறுவதாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகார்கள் வந்துள்ளன.

ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் ஆண்டு கட்டணத்தை உயர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொள்கிறேன். பெற்றோர்கள், பள்ளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு மாநிலக் கல்வித் துறைகள் கட்டணச் சிக்கலைத் தீர்க்கும் என நம்புகிறேன்.

இந்நிலையில், பள்ளிக் கட்டணம் தொடர்பாக மத்திய அமைச்சர் தனது ட்விட்டரில் தெரிவித்தவுடன், ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

உயர்கல்வித் துறையில்கூட, அகில இந்திய உயர் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு, ஊரடங்கு காலத்தில் கட்டணம் செலுத்துமாறு மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் பார்க்க: மணிப்பூர் பெண் மீது எச்சில் துப்பிய இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details