உலகிலுள்ள 185 நாடுகள் கோவிட் -19 வைரஸ் தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக இதுவரை எந்தவொரு நாடும் தீர்க்கமான தீர்வை முன்வைக்கவில்லை.
இதுபோன்ற கணிக்க முடியாத அபாயங்கள் ஏற்படும்போது நாம் செல்லும் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, பின்நோக்கி வருவதுதான் சிறந்தது. ஏனென்றால் இதுபோன்ற சிக்கல்களுக்கான தீர்வை, தனித்து எந்தவொரு அமைப்பும் ஆராய முடியாது. எனவே அரசு Multi layered Process எனப்படும் பல அடுக்கு படிநிலைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. உலகளாவில் ஏற்படும் நெருக்கடியின்போது, அரசு எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதே அந்த அரசின் திறனை வெளிப்படுத்துவதாக இருக்கும்.