தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கார்கில் போர்: பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்க ரீதியில் வென்ற இந்தியா - கார்கில் போர்

பாகிஸ்தானுக்கு உள்பட்ட எல்லைப் பகுதிக்குள் செல்ல இந்தியா ஒருபோதும் நினைத்ததில்லை. முன்னாள் ராணுவ தளபதி வி.பி. மாலிக், தான் எழுதிய இந்திய ராணுவ மோதல்களும் ராஜதந்திரமும் என்ற புத்தகத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

By

Published : Jul 26, 2020, 5:33 PM IST

கார்கில் போரின்போது அதிரடியாக செயல்பட்ட பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்க ரீதியில் இந்தியா சரியான பதிலடியை கொடுத்து அவர்களை தனிமைப் படுத்தியது. பாகிஸ்தானின் பொய்யான பரப்புரைகளை சர்வதேச நாடுகளுக்கு இந்தியா தோலுரித்துக் காட்டியது.

பாகிஸ்தான் ஊடுருவல் குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவின் ராணுவ அலுவலர்களும் தூதரக அலுவலர்களும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். தாங்கள் ஊடுருவலில் ஈடுபடவில்லை என பாகிஸ்தான் தெரிவித்த நிலையில், டேப்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் மூலம் அவர்களின் பொய் சர்வதேச சமூகத்திடம் அம்பலப்படுத்தப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரசியல் ஆக்க வேண்டும் என பாகிஸ்தான் திட்டமிட்டது. இருப்பினும், இந்தியாவின் பதிலடியால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதாகவம், சியாச்சின் பனி ஆற்றில் இந்திய ராணுவம் மையம் கொண்டிருந்த விவகாரத்தை பெரிதாக்கும் நோக்கில் பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டது. இதற்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானின் செயல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என இந்தியா பரப்புரை மேற்கொண்டு வெற்றிபெற்றது. அணு ஆயுதத்தை கொண்ட எந்த நாடும் தனது அண்டை நாட்டுக்கு எதிராக இம்மாதிரியாக பொறுப்பற்று அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதில்லை என இந்திய தரப்பு தெரிவித்தது.

மற்ற உலக நாடுகள் அனைத்தும் தன்னோடு கை கோர்த்து கொண்டு போர் நிறுத்தத்தை இந்தியாவிடம் வலுயுறுத்தும் என பாகிஸ்தான் நம்பிக் கொண்டிருந்ததது. ஆனால், இந்திய தூதரக அலுவலர்கள் துரிதமாக செயல்பட்டதன் மூலம் கார்கிலிலிருந்து பாகிஸ்தான் தனது படைகளை திரும்பபெற வேண்டும் என அமெரிக்கா போன்ற நாடுகள் வலியுறுத்தியது.

இந்தியா, பாகிஸ்தானுக்கு உள்பட்ட எல்லைப் பகுதிக்குள் செல்ல ஒருபோதும் நினைத்ததில்லை. முன்னாள் ராணுவ தளபதி வி.பி. மாலிக், தான் எழுதிய இந்திய ராணுவ மோதல்களும் ராஜதந்திரமும் என்ற புத்தகத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதை இந்தியா வெளி உலகுக்கு தெரிவித்தது. குறிப்பாக, ஊடுருவலை மேற்கொண்டவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல பாகிஸ்தான ராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் மாதத்தின் பிற்பகுதியில், படைகளை திரும்பப்பெறாவிட்டால் பொருளாதார தடை விதிக்கப்படும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், G-8 நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தின் பேரில், இஸ்லாமிய மாநாட்டின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு எதிரான தீர்மானங்களை திரும்ப பெற்றது. 1999ஆம் ஆண்டு, ஜூலை 4ஆம் தேதி அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாஷிங்டன் சென்றிருந்தார். அப்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இதனை பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனது புத்தத்தில், "பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற்றது. இது, நவாஸ் ஷெரீப்புக்கு மனச்சோர்வு ஏற்படுத்தியது. பின்னர், கிளிண்டனின் அழுத்ததின் விளைவாக போரை முடிவுக்கு கொண்டு வர அவர் ஒத்துக்கொண்டார் என கூறியிருக்கிறார்.

இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவர்கள்

கார்கிலிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றும் முயற்சியில் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் சிறப்பாக செயல்பட்டார். போரில் பாகிஸ்தானை வீழ்த்த அனைவரையும் ஒன்றிணைப்பதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா முக்கிய பங்காற்றினார். தூதரக ரீதியில் ஆதரவை பெற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் முன்னின்று செயல்பட்டார். பாகிஸ்தானின் பொறுப்பற்ற செயலை வெளிஉலகுக்கு தோலுறித்து காண்பிக்கும் நோக்கில் வெளியுறத்துறைச் செயலர் கே. ரகுநாத் தொடர் நடவடிக்கைகளை எடுத்தார்.

இதையும் படிங்க: கார்கில் போருக்கு பின் எல்லையை பலப்படுத்த இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள்!

ABOUT THE AUTHOR

...view details