தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 10, 2020, 9:52 AM IST

Updated : Mar 10, 2020, 10:56 AM IST

ETV Bharat / bharat

விலை சரிந்த கச்சா எண்ணெய் - இந்தியாவில் அதன் தாக்கம் என்ன?

டெல்லி: கொரோனா வைரஸால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சியை அடுத்து, இந்தியாவில் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் காணலாம்.

crude-oil-prices
crude-oil-prices

கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் எண்ணெய் வர்த்தகம் பின்னடைவைச் சந்தித்துவருகிறது. இந்த நிலைமை சரியாவதற்கு ஆறு மாதம் முதல் பன்னிரெண்டு மாதங்கள் வரை ஆகலாம் எனக் கணிக்கப்படுகிறது.

குறிப்பாக ப்ரெண்ட் வகை (Brent) கச்சா எண்ணெய்யின் விலையானது 30 விழுக்காடு குறைந்து, ஒரு பீப்பாய் 31.02 டாலராக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு காணப்படும் மிகக் குறைவான விலை இதுவாகும். அதேபோல் அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 27 விழுக்காடு குறைந்து தற்போது 30 டாலராக உள்ளது.

இந்தச் சரிவுக்கான காரணம்

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா-ரஷ்யாவின் ஒப்பந்தம் காரணமாக இந்த விலை குறைவு நிகழ்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமெங்கும் ஏற்பட்ட பொருளாதார நிலையை சரிசெய்ய பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக் (OPEC), இந்த விலை குறைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த வியாழக்கிழமை ஒபெக், எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு கூடுதலாக 1.5 மில்லியன் பீப்பாய்கள் குறைக்க ஒப்புக்கொண்டது. உற்பத்தி அதிகரிப்பே இந்த விலை சரிவுக்கு முக்கியக் காரணம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார நிலையை சரிசெய்ய இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இதுவே மிகக் குறைந்த விலை மாற்றம். கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவும் ஏற்றமுமாகக் காணப்படுகிறது. அமெரிக்கா, கனடா, பிரேசில், நார்வே ஆகிய நாடுகளில் உற்பத்தி அதிகரிப்புக் காரணமும், சீனாவில் இறக்குமதியும் குறைந்ததால் அதிகப்படியான எண்ணெய் விற்பனைக்கு வருகிறது.

பயனடையும் இந்தியா

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது ஜனவரி இறுதியிலிருந்து லிட்டருக்கு 4 ரூபாய் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவு, எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களாகிய இந்தியன் ஆயில், பீ.பி.சி.எல். (BPCL), ஹெச்.பி.சி.எல். (HPCL) ஆகியவற்றிக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில எரிபொருள் விற்பனையாளர்கள் தங்கள் உள்நாட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை சர்வதேச நிறுவனங்களுடன் விலை மதிப்பை ஒப்பிட்டுப் பார்க்க குறைந்தது 15 நாள்களாவது தேவைப்படும். எனவே உள்நாட்டு எரிபொருள் விலையின் உண்மையான நிலையை அறிய இன்னும் ஒரு வாரமாகும். இந்தியா 85 விழுக்காடு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதனால் எரிபொருள் விலை குறைவு இந்தியாவிற்கு நல்ல ஆதாயமானதே.

கச்சா எண்ணெய் டாலரின் விலையில் ஒரு யூனிட் வீழ்ச்சி, இந்தியாவின் இறக்குமதியின் அடிப்படையில் மூன்றாயிரம் கோடி ரூபாய் குறைகிறது. 45 பீப்பாய் கச்சா எண்ணெய் விலையால் நம் நாட்டிற்கு 2 பில்லியன் (200 கோடி) டாலர்கள் சேமிக்க உதவுகிறது. அதாவது 14 ஆயிரம் கோடி ரூபாய் லாபம். கச்சா எண்ணெய் விலையில் 10 விழுக்காடு குறைக்கப்பட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தி 30 அடிப்படைப் புள்ளிகள் உயர்வு அடைகிறது.

(எழுத்தாக்கம்: பெட்ரோல் மற்றும் ஆற்றல் படிப்புக்கான பல்கலைக்கழகத்தின் (UPES) வர்த்தகப் பள்ளிக்கான ஆற்றல் பொருளாதாரம் கற்பிக்கும் டாக்டர் ஹிரன்மோய் ராய். தற்போது இவர் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வணிகத் துறைத் தலைவராகவும் உதவிப் பேராசியரியராகவும் இருக்கிறார்.)

(பொறுப்புத் துறப்பு: மேலே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் முழுக்க முழுக்க ஆசிரியரின் கருத்துகள். ஈடிவி பாரத் நிர்வாகத்தின் படைப்பல்ல, எந்தவொரு முதலீடு செய்வதற்கு முன் சான்றளிக்கப்பட்ட நிபுணர்களின் அறிவுரை கேட்கும்படி ஈடிவி பாரத் அறிவுறுத்துகிறது.)

இதையும் படிங்க:தொடர்ந்து நான்காவது நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைவு

Last Updated : Mar 10, 2020, 10:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details