கச்சா எண்ணெய் விலை சரிவில் இருந்து இந்தியா எவ்வாறு மீளும்?
கச்சா எண்ணெய்யின் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வரும் நிலையில், தற்போது கச்சா எண்ணெய் விலை குறையும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக பல பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவில் ஏற்பட்ட இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் பின்னடைவைச் சந்திக்கிறது. மேலும் இந்த நிலைமை சரியாக ஆறு மாதம் முதல் பன்னிரெண்டு மாதம் ஆகலாம்.
ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலையானது முப்பது சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 31.02 டாலராக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு இதுவே மிக குறைவான விலை. அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 27 சதவீதம் குறைந்து தற்போது 30 டாலராக உள்ளது.
இந்த அதிரடி சரிவுக்கு என்ன காரணம்?
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் ஒப்பந்தம் காரணமாக இந்த விலைக் குறைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமெங்கும் ஏற்பட்ட பொருளாதார நிலையைச் சரி செய்ய பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான (ஒபிஇசி) இந்த விலை குறைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஒபிஇசி எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு கூடுதலாக 1.5 மில்லியன் பீப்பாய்கள் குறைக்க ஒப்புக்கொண்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உலக பொருளாதார நிலையைச் சரிசெய்ய இதே முடிவு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இதுவே மிகக்குறைந்த விலை மாற்றம்.
கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவேற்றமாக காணப்படுகிறது மற்றும் அமெரிக்கா, கனடா, பிரேசில், நார்வே ஆகிய நாடுகளில் உற்பத்தி அதிகரிப்பு மேலும் சீனாவில் இறக்குமதி குறைந்ததால் அதிகப்படியான எண்ணெய் விற்பனைக்கு வருகிறது.