மக்களை பிரித்து, அச்ச உணர்வு ஏற்படுத்தி சமூகத்தை மூழ்கடிக்கும் தன்மை வெறுப்புணர்வு, வன்முறை ஆகியவைக்கு உள்ளது. பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் வன்முறைச் சம்பவங்களால் மக்கள் கவரப்பட்டிருந்தாலும், தற்போது காந்தியத்தின் உயர்வை புரிந்து கொண்டு அதனை பின்தொடர ஆரம்பித்துள்ளார்கள். தொடக்கத்தில் வன்முறைகளுக்கு வெற்றி கிடைத்திருந்தாலும், இறுதியில் அமைதிக்குதான் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மனிதத்தை வளர்க்க காந்திய மொழி இன்றியமையாதது. சுதந்திர போராட்டத்திற்கு மட்டும் காந்தி உத்வேகம் அளிக்கவில்லை, ஒருவரை எப்படி அனுகவேண்டும் என்பதையும் அவர் கற்றுக் கொடுத்துள்ளார். வார்த்தைகளால்தான் ஒருவரை தொடர்புகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மை, நேர்மை, எளிமை ஆகியவை காந்தியின் பேச்சு, எழுத்து, சொற்பொழிவு ஆகிய அனைத்திலும் இடம்பெற்றது. இது அவரின் கொள்கைகளை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. அவர் பத்திரிகைகள், உரைகள் ஆகியவை மூலம் வெளிவரும் கருத்துகள் அனைத்தும் சுதந்திரத்தை நோக்கி மக்களை அழைத்தும் செல்லும் வல்லமை பெற்றிருந்தது. வன்முறையை காட்டிலும் அகிம்சை பலமடங்கு வலிமை என்பதை காந்தி நிரூபித்தார்.
மனிதத்தை மீட்க வந்த காந்தியின் எழுத்துக்கள் மக்களை அகிம்சையை பின்தொடர வைத்தது. காந்தி பேசுவதற்கு மிகவும் கூச்சப்படுவார். ஆனால், அதனை அவர் தன் சொத்தாக கருதினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் பேசுவதற்கு கூச்சப்பட்டிருக்கிறேன். அதனை நினைத்து வருத்தப்பட்ட காலமும் உண்டு. ஆனால், அதனை நினைத்து தற்போது மகிழ்ச்சி கொள்கிறேன். தேவையின்றி வார்த்தைகளை வீணடிக்க வேண்டாம் என்ற கருத்து எனக்கு உள்ளது" என்றார். அவர் எழுத்துக்கள் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை, அவர் பேசிய அகிம்சை கொள்கைகள் மக்களிடையே ஏற்படுத்தியது. மனசாட்சி, ஒழுக்கம், தன்னை பின்தொடர்பவர்கள் மேல் நம்பிக்கை வைத்த காந்தி, மொழிக்கு புதிய இலக்கணத்தை கற்பித்தார். காந்தி தன்னை பின்பற்றுபவர்களுக்கு ஒரு வித மனஅமைதியை அளித்தார். பிரச்னைகளால் சிக்கி தவிக்கும் மக்களை சிறந்த சிந்தனையாளர்களாக காந்தி மாற்றிக் காட்டினார்.