கரோனா வைரஸ் உலகளவில் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்றுவருகிறது. இந்த வைரஸ் சுவாச மண்டலத்தை மட்டுமே தாக்குகிறது என்று நாம் கருதுகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், இந்த வைரஸ் கண்கள், இதயம்,கல்லீரல், மூளை மற்றும் சிறுநீரகங்கள் போன்ற பல உறுப்புகளைப் பாதிக்கிறது.
லண்டனின் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் அஜய் ஷா, வைரஸ் தாக்கத்தின் அளவு முன்னர் கருதப்பட்டதை விட, அதிகமாக இருப்பதாகக் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா வைரஸ் நோயாளிகளை ஆராய்ந்த பின்னர், அவர் இதனை தெரிவித்தார். அறிகுறியற்ற நிகழ்வுகளுக்கு மேலதிகமாக, மீட்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளில் கோவிட்-19 பெருந்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் மீண்டும் காணப்படுகிறது.
நாசி செல்கள்(மூக்கு) கரோனா வைரஸ் துகள்களை ஈர்க்க அதிக வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில், வைரஸ் நாசிக்குள் இருக்கும். இந்த நேரத்தில், வாசனை உணர்வை வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இழக்கக்கூடும். பின்னர் வைரஸ் மெதுவாக நாசி குழி வழியாகத் தொண்டைக்குள் செல்கிறது.
அதன்பின்னர் உள்ளே சென்று உயிரணுக்களுடன் பிணைக்கப்பட்டு, வைரஸ் பெருகத் தொடங்குகிறது. இந்தக் காலகட்டத்தில், வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், வைரஸை மற்றவர்களுக்கு அவர்கள் பரப்பும் வாய்ப்பு உருவாகும்.
வைரஸ் தொண்டையில் நுழையும் போது, நமது நோய் எதிர்ப்பு சக்தி செயல்பட தவறினால், அது நம் நுரையீரலுக்குள் தங்கிவிடும்.
வைரஸ் பெருக்கம், காற்றுப்பாதையில் பயணிக்க தொடங்கியதும், வைரஸ் புரதங்கள் நுரையீரல் செல்களுக்குள் நுழைகின்றன. இதையடுத்து நுரையீரல் வீக்கமடைந்து, சுவாசிப்பது கடினமாகிறது. இது நிமோனிடிஸ் (நிமோனியா காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னை) என்ற நிலையை ஏற்படுத்துகிறது.
சுவாச தசைகள் வீங்கி, நுரையீரலில் திரவம் சேகரிக்கப்படுகிறது. சில நோயாளிகள் கடுமையான சுவாசக் குழாய் பிரச்சனையை எதிர்கொள்கின்றன. மேலும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஆபத்தான அளவிற்கு குறைகிறது. இந்நிலையில், நோயாளிக்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது.
ஆனால் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. வென்டிலேட்டர்கள் தொடர்ந்து இயந்திர சுவாசத்தை அளிக்கும்போது, நோய் எதிர்ப்பு அமைப்பு வைரஸை எதிர்த்துப் போராட மட்டுமே காத்திருக்க முடியும். இக்கட்டத்தில் அதிகப்படியான செயல்படும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர்.
இம்யூனோகுளோபின்கள் ஹோஸ்ட் செல்களைத் தாக்குகின்றன. அதையடுத்து உடல் முழுவதும் வீங்கி, இதய துடிப்பு அதிகரிக்கிறது. ரத்த நாளங்கள் வீக்கமடைகின்றன. சுமார் 20 சதவீத பேருக்குச் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. இப்பாதிப்பு காரணமாக, அவசர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகள் உறுப்பு செயல் இழப்பால் இறப்பதற்கு இதுவே காரணம்.
இதயம் மற்றும் ரத்த நாளங்களில், என்.சி.ஓ.வி வைரஸின் தாக்கம் குறித்து இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. இது ரத்த நாளங்களை அவற்றின் சுவர்களைத் தாக்கி, இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது. ஜமா கார்டியாலஜியின் அறிவிப்பின்படி, வூஹானில் 416 கரோனா நோயாளிகள் பற்றிய ஆய்வில், அவர்களில் 20 சதவீதம் பேர் இதய செயலிழப்பால் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.