டெல்லியில் உள்ள தேசிய தலைநகர்ப் பகுதி சில நாட்களுக்குப் பிறகு சூரிய ஒளியை கண்டது. இருண்ட மங்கலான புகை, கடுமையான காற்று மாசுபாடு காரணமாக கட்டாய விடுமுறையைத் தொடர்ந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக காற்றின் மாசு அபாய நிலையைத் தாண்டியதைத் தொடர்ந்து, மற்ற நாடுகளின் தூதரக அலுவலர்கள் இதுகுறித்த தங்களின் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர். டெல்லியில் பயணம் மேற்கொண்டுள்ள மூத்தத் தூதரக அலுவலர் டீன் ஃபிராங்க் எச்டி காஸ்டெல்லானோஸ் என்பவர், மாசு குறித்து தன் யோசனைகளையும் சுற்றுச்சூழல் தீர்வுகளையும் வெளியுறவுத்துறையைச் சேர்ந்த அலுவலர்களைச் சந்தித்து தெரிவிக்கவுள்ளார்.
காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் டெல்லி மாசு குறித்து அவர் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் உரையாடினார். அப்போது, "டெல்லியில் வசிக்கும் மக்களும் நாங்களும் ஒரே காற்றைத்தான் சுவாசிக்கிறோம். அபாய நிலையைத் தாண்டிய மாசுவைக் கட்டுப்படுத்த வெளியுறவுத்துறையைச் சேர்ந்த அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தவுள்ளோம். ஏனெனில், இது டெல்லி குடியிருப்பாளர்களை மட்டும் பாதிக்காது, வணிகம், சுற்றுலாவிற்காக இங்குவரும் வெளிநாட்டவரையும் பாதிக்கும்" என்றார்.
காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் டெல்லியில் நிலவிய மாசால் தூதரக அலுவலர்கள் சிரமத்திற்கு உள்ளானர்கள், இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி 2017ஆம் ஆண்டு தூதராக இருந்த காஸ்டெல்லானோஸ் ஒரு சிறிய அளிவலான அடையாளப் போராட்டம் நடத்தினார். இது நாட்டின் வெளியுறவுத்துறைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தூதரக அலுவலர்கள், அவர்களின் குடும்பத்தார் ஆகியோர் மாசுவால் பாதிக்கப்பட்டதாக தூதரகம் தெரிவித்திருந்தது. ஆசியன் அமைப்பைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் மாசுவைக் காரணம்காட்டி தங்களின் பணிகளை முடித்துக்கொண்டும், மற்றவர்கள் தங்களின் விடுமுறைகளை முன்கூட்டியே எடுத்துக் கொண்டும் நாட்டிலிருந்து வெளியேறினர்.
காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் கோஸ்டா ரிகா தூதர் மரியெலா குரூஸ் அல்வாரெஸ், சுவாசத்தில் ஏற்பட்ட பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தாய்லாந்து தூதரகம் இந்தியாவை 'கடினமான சுற்றுச்சூழல் கொண்ட நாடு' என அறிவிக்க பரிசீலனை செய்தது. அப்போதிருந்து தங்களின் தூதரகர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அந்தந்த நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் பிரெஞ்சு தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ரமி டிரூட்டவுவராயனே இது குறித்து நமது செய்தியாளரிடம் பேசினார். அப்போது, "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரெஞ்சு தூதரக வளாகத்தில் காற்று சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நல்லுறவை மேற்கொண்டுவருகின்றன. சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க எங்கள் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தியா வந்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து அவர் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜவடேகரை சந்தித்துப் பேசினார்" என்றார்.
காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே சீன தூதரகம் தனது அலுவலர்களுக்கு முகமூடிகளை அளித்து அவர்களின் உடல்நிலையை பாதுகாத்துவருகிறது. தூதரக வளாகத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பிலும் இரண்டு காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜெர்மன் தூதர் வால்டர் லிண்டர், "அனைவராலும் காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை அளித்துவிடமுடியாது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு சிரமப்பட்டுவரும் ரிக்ஷாகாரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை அளிப்பது சாத்தியமில்லை. வெளிநாட்டு தூதராக நான் இருந்தபோதிலும் டெல்லி அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள ஆட்-ஈவன் திட்டத்தை பின்பற்றிவருகிறேன்" எனக் கூறினார் .
காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் மேலும் அவர், "எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் சோதனை மற்றும் பிழை இருந்தாலும், காற்றின் தரத்தை மேம்படுத்த வேண்டும். மற்ற நாடுகள் இதை முயற்சித்துள்ளன. இந்த யோசனைகளை பரிசோதித்துப் பார்ப்பது பயனளிக்கும்" என்றார். பல தூதர்களைப் போல் லிண்ட்னர் காற்று மாசுவை காரணம் காட்டி தன் பயணங்களை ரத்து செய்துள்ளார்.
காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் இது குறித்து துனிசிய தூதர் நெஜ்மெடின் லேகக் நமது நிருபரிடம் கூறியபோது, "இது முதலில் நம் உடல்நிலையை பாதிக்கிறது. மாசுவால் ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே இருந்தேன். சில நண்பர்களை சந்திக்க ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணி நேரம் மட்டுமே வெளியேறினேன். இது எங்கள் வேலையில்கூட தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றார். மாசுவைக் கட்டுப்படுத்தக் கோரி டெல்லி மக்கள் 'இந்தியா கேட்'இல் போராட்டம் நடத்தினர். கடுமையான காற்று மாசு காரணமாக குழந்தைகளுக்கு மார்பு வலி, கண்கள் மற்றும் தொண்டையில் எரியும் உணர்வு, கடுமையான சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து, 12ஆம் வகுப்பு மாணவரான குஷி, "நடந்துகொண்டிருப்பது அரசியல் பழிவாங்கும் செயல், இது நேரவிரயம்" என்று கூறினார் . 11ஆம் வகுப்பு மாணவி ஈஷா, "மாசை சமாளிக்க ஒதுக்கிய நிதி குறைவானது" என குற்றஞ்சாட்டினார். காற்றின் தரம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின்போது மோசமடைகிறது. எனவே, ஆட்-ஈவன் திட்டத்தை( ஒற்றைப்படை எண்கள் கொண்ட வாகனங்களுக்கு ஒரு தேதியும், இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்களுக்கு மற்றொரு தேதியும் வழங்கப்படும். குறிப்பிட்ட அந்த தேதிகளில் மட்டும் வாகனங்களை இயக்க வேண்டும். இதுவே ஆட்-ஈவன் திட்டமாகும்) ஆண்டு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.