கரோனா தொற்றின் தாக்கம் உலக நாடுகளில் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே செல்கிறது. கரோனா தொற்று குறித்து அறிந்துகொள்ள உலகம் முழுவதும் பல்வேறு ஆரயாச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இது குறித்து ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் நரம்பியல் விஞ்ஞானிகள் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில் கரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் தற்காலிக வாசனை நுகரும் திறன் இழப்பு ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் காரணமாக நியூரான்கள் பாதிக்கப்படுவதில்லை என்றும் செல்கள் மட்டுமே பாதிக்கப்படுவதும் அதில் கண்டறிப்பட்டுள்ளது.
அனோஸ்மியா எனப்படும் தற்காலிக வாசனை நுகரும் திறன் இழப்பு கரோனா தொற்றால் ஏற்படும் ஆரம்பகட்ட மற்றும் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். காய்ச்சல், இருமல் போன்ற மற்ற அறிகுறிகளைவிட கரோனாவை கண்டறி இந்த வாசனை திறன் இழப்பு சிறப்பாக பயன்படுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் கரோனா நோயாளிகளுக்கு ஏன் இந்த வாசனை நுகரும் திறன் இழப்பு ஏற்படுகிறது என்பதற்கான தெளிவாக காரணங்கள் ஆராய்ச்சியாளர்களால் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.