அண்மைகால நுண்ணூட்டச் சத்து தொடர்பான ஆய்வுகள், (தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-4 ,ஒருங்கிணைந்த தேசிய ஊட்டச்சத்து ஆய்வு) இந்தியாவின் நுண்ணூட்டசத்துகுறைபாடு தொடர்ந்து அதிக சுமையாக இருப்பதை, அதிகரித்து வரும் அதீத எடை உடல் பருமன் சுமையையும் எடுத்துக் காட்டும் அதே வேளையில், நமது நாட்டின் 71வது இந்திய குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பங்கேற்ற ஒரு நிகழ்வும் நடந்தது.
நாற்பது ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்தில் வளர்ச்சி குறைபாட்டின் விகிதத்தை 55 சதவிகித த்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைத்து பிரேசில் ஒரு சாம்பியன் ஆனதை கண்டு ஊட்டசத்து சமூகம் உற்சாகமாக இருந்தது. கூடுதலாக, அந்நாட்டில் வளர்ச்சி குறைபாடு குழ்ந்தைகள் எண்ணிக்கை அதிவேகத்தில் குறைந்தது.
பிரேசில் இதனை எப்படி செயல்படுத்தியது? வளர்ச்சிக் குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பதற்கான அடிப்படைக்காரணங்கள் என்ன என்று பிரேசில் ஆய்வு செய்தது. உணவு போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை, பெண்கள், குழந்தைகளுக்கான போதுமான சுகாதாரப் பாதுகாப்பு இல்லை, சுகாதார சேவை குறைபாடு, ஆரோக்கியமற்ற சூழல் ஆகிய முக்கியமான காரணிகள் அடையாளம் காணப்பட்டன.
பெரிய அளவுக்கு இந்தியாவும் இந்த கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறது என்பதையும் நிச்சயமாக இது நமக்கு நினைவூட்டும். இதர நாடுகளின் தீர்வுகளை எடுத்துக் கொள்வது அல்லது அதனை நமது பரந்த நிலப்பரப்பில் செய்து பார்ப்பது நேர்மையற்றதாக இருக்கலாம். வெறுமனே, வெட்டி ஒட்டும் அணுகுமுறை, கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.
ஆனால், கவனத்துடன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப அதனை மேற்கொள்ளுதல் என்பது நமக்கு உதவுவதாக இருக்கும். இதில் இருந்து நான் என்ன செய்ய விரும்புகின்றேன். புதிதாக ஒன்றும் அல்ல. அனைத்து விதமான ஊட்டசத்து குறைபாட்டையும் இல்லாமல் செய்வதற்கான அரசின் நோக்கமான ஊட்டசத்து குறைபாடு இல்லாத இந்தியா-2022 என்ற அரசின் கண்ணோட்டம் அதிக திறன் கொண்டதாக மற்றும் எல்லா மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
பல்வேறு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்கான நமது நடவடிக்கைகள் தொடர்பான நமது முயற்சிகள் உண்மையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், சிலவற்றில் வலுவான யுக்திகள் தேவைப்படுகிறது என்பதே என்னுடைய நோக்கமாகும்.
அ) ஆதாரம்-உயர்தரமான துல்லியமான புள்ளிவிவரங்களை பெறுவதற்கான கருவிகளில், நிகழ்கால செயல்களை மேம்படுத்துவதற்கான நுட்பம், தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துதல். இது தவிர பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பிடும் செயல்முறைகளும் இந்த இடைவெளிக்கு துணைநிற்கும். செயல்கள் சரியான திசையில் செல்வதற்கு உதவ வேண்டும்.
ஆ) உணவு முறைகள்-ஆரோக்கியமான மக்கள் தொகைக்கு முக்கியமான தொடர்புகளில் ஒன்றாகும். இப்போதைய உணவு முறை, ஆரோக்கியமற்ற உயர் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பின் அதிகரிக்கும் நுகர்வுக்கு ஆதரவு அளிப்பதாக இருக்கலாம். உள்ளூரில், பருவகாலங்களில் தூய்மையானதாக கிடைக்கும் வெவ்வேறு விதமான தானியங்கள், காய்கறி மற்றும் பழங்களின் மூலம் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தரக்குறைவு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. நமது தேசிய ஊட்டசத்து திட்டங்கள், நுண்ணூட்ட சத்து குறைபாட்டைப் போக்கும் வகையில் வலுப்படுத்தப்பட்ட தானியங்கள் பிரதான உணவுகளை உபயோகிப்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது.
ஆனால், நாம் நமது நாட்டின் பாரம்பர்ய உணவுகள் உபயோகத்தை பிரபலப்படுத்துவோம் குறிப்பாக நமது இளம் தலைமுறையினர் நீண்டநாட்கள் வாழ, நமது வீடுகளில், நமதுஉணவுத்தட்டுகளில் மாறுபட்ட இந்திய உணவு வகைகளை மீண்டும் கொண்டு வருவோம்.
இ)நிதி உதவி -பணம் இல்லாமல் ஒன்றும் செயல்படாது. பொது சுகாதாரம் மற்றும் நுண்ணூட்ட சத்து திட்டத்துக்கு தொடர்ச்சியான முன்னுரிமையாக நிதி இருக்க வேண்டியது முக்கியமானது என்பது மட்டுமல்ல, நிதிமுறைகளைப் பயன்படுத்தி, மக்களை நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும் ஆரோக்கிய விருப்பங்களை நோக்கி உந்துவதும் ஆகும்.
வறுமை ஒழிப்பு, பாலின மற்றும் வருவாய் சமமின்மையை சரிசெய்வதற்கான உத்தரவாதம் அளிக்கக்கூடிய நன்றாக கட்டமைக்கப்பட்ட ஏழைகளுக்கான கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். அரசால் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், உறுதியான போதுமான வருவாய் பகிர்ந்தளிப்பு, சுகாதார, நுண்ணூட்ட சத்துகள் சேவைகள் கிடைப்பதை அதிகரித்தல் ஆகியவைதான் ஒதுக்கப்பட்ட பிரிவினர் வாழ்வில் உண்மையில் ஒளியேற்றுவதாக இருக்கும். பயனாளிகள் நலனில் ஊழல், மோசமானபொறுப்புடைமை விரைவாக கண்டறியப்பட்டு அகற்றப்பட வேண்டும்.
ஈ)தனிச்சிறப்பு வாய்ந்த தாய்பால் அளித்தல் மற்றும் குழந்தைகள் இளம்குழந்தைகளுக்கு உணவளித்தல்: அரசாங்கத்திடம் இருந்து நிறைய எதிர்பார்ப்புகளை கணக்கிடமுடியும், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு இளம் குழந்தைகளுக்கு உணவளிப்பது உகந்ததாக தனிப்பட்ட பொறுப்புடைமை கொண்டதாக இருக்க வேண்டும்.
எனினும், வெளி சூழல் காரணிகள், (குடும்பத்தின் பன்முகத்தன்மை, சமூக பொருளாதார சூழல், அணுகல் மற்றும் வசதி, ஆதரவான பணிக்கொள்கைகள் உள்ளிட்டவை)அந்த நடைமுறைகளை வடிவமைப்பதாக இருக்கலாம். 7 சதவிகிதத்துக்கும் குறைவான இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போதுமான அளவு உணவு மற்றும் ஊட்டம் அளிக்காமல் இருப்பதற்கு எந்தகாரணமும் இல்லை.