உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி ஏவுகணைகள் கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடியவை. அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வல்லமை படைத்த இவை ரகசிய ராணுவத் தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அக்னி ஏவுகணை இருக்கும் ரகசிய ராணுவத் தளம் அஸ்ஸாமில் உள்ளதாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிராங்க் ஓ டோனல், அலெக்ஸ் பொல்ஃபிராஸ் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிக்குரிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்திய-சீன மூலோபாய நிலை என்று பொருள்படும் 'The Strategic Posture of China and India' என்ற பெயரில் சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் அவர்கள் கூறியுள்ளதாவது, "ஊடகங்களில் வெளியான செய்தி, பாகிஸ்தான்-வங்க தேச ராணுவ தகவல்கள், குறிப்பாக இந்திய ராணுவ அலுவலர் ஒருவரின் முகவரி மாற்றம் உள்ளிட்ட தகவலை வைத்து அக்னி ஏவுகணைகள் இருக்கும் ரகசிய ராணுவத் தளத்தைக் கண்டறிந்துள்ளோம்.