தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பு; உ.பி.யில் இடிந்துவிழுந்த 2 வீடுகள்! - Uttar Pradesh's Ballia floods

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து சேதமாகின.

வீடுகள் இடிந்து விழுந்தது

By

Published : Sep 8, 2019, 2:50 PM IST

உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பாலியா மாவட்டத்தில் உள்ள சுபே சாப்ரா, லாலா உத்யன், கங்காபூர், சுகர் சாப்ரா, மஜ்ஹவா, கரயா, பதில்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட சுபே சாப்ரா பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால், வீடுகளின் உரிமையாளர்கள் வீடின்றி தவித்துவருகின்றனர்.

பாலியா மாவட்டத்தில் 2003, 2013 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைவிட இந்த ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details