தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடும்பங்களின் செலவு மேலும் அதிகரிக்கும் - ஆர்பிஐ நடத்திய கணக்கெடுப்பில் வெளியான தகவல்

டெல்லி: குடும்பங்களின் செலவினங்கள் அடுத்த ஓராண்டிற்கு பிறகு மேலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

RBI Survey
RBI Survey

By

Published : Dec 6, 2020, 8:05 AM IST

கரோனா தொற்று தாக்கத்தால் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் செலவு ஓராண்டிற்கு பிறகு மேலும் அதிகரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய கணக்கெடுப்பில் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் சுமார் 13 நகரங்களில் 5,319 வீடுகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 63.0 சதவீதம் பேர் இந்த ஆண்டின் செலவினங்களுடன் ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு நவம்பரில் தங்களின் செலவு அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல் சமீபத்தில் வெளியான இரு மாதங்களுக்கான நுகர்வோர் கணக்கெடுப்பின் தகவல்படி, அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான செலவினங்கள் அடுத்த ஆண்டு அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கரோனா தொற்றால் பல்வேறு தரப்பினரும் வேலையிழந்துள்ள சூழ்நிலையில், செலவுகள் மேலும் அதிகரிக்கும் என்பது நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கடந்த காலாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை கடும் உயர்வு

ABOUT THE AUTHOR

...view details