ஹைதராபாத்: மத்திய அரசு தெரிவித்துள்ளதை போல, ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மாநிலத்தில் ஊரடங்கில் எந்த தளர்வும் செயல்படுத்த திட்டம் இல்லை என முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முடிவெடுப்பார் என்று நம்பப்படுகிறது.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் அமைச்சர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதன் முடிவுகளை தற்போதே வெளிப்படத் தொடங்கியுள்ளது. ஆம், தெலங்கானாவில் நாளுக்கு நாள் கரோனா நோய்க் கிருமியின் தொற்று அதிகரித்து வருகிறது.
இதனால், மத்திய அரசு அறிவித்த சில தளர்வுகளை பின்பற்ற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் 20ஆம் தேதி முதல் கரோனா தொற்று இல்லாத மாவட்டங்களுக்கு சில தளர்வுகளை நடைமுறைப்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இச்சூழலில், தெலங்கானா மாநிலத்திலும் இந்த தளர்வுகளை மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பார் என்று நம்பப்பட்டது. ஆனால், வளர்ந்து வரும் தொற்றினால், மே 3ஆம் தேதி வரை எந்த தளர்வுகளுக்கும் இடமில்லை என்ற அறிவிப்புகள் வெளியாகும் எனக் தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.