மும்பையில் செயல்பட்டுவரும் பிரபல ஃபோர் சீசன் ஓட்டல் தன்னிடம் இரண்டு அவித்த முட்டைக்கு ரூ. 1,700 வசூலித்ததாக கார்த்தி தார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவில் விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்துப் புகழ் பெற்ற ராகுல் போஸையும் டேக் செய்திருந்தார்.
இரண்டு அவுச்ச முட்டை ரூ. 1700: அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர் - இரண்டு அவுச்ச முட்டை ரூ. 1700
மும்பையிலுள்ள ஃபோர் சீசன் ஓட்டலில் இரண்டு முட்டைக்கு ரூ. 1,700 வசூலித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுச்ச முட்டை இரண்டு ரூ. 1700
முன்னதாக சண்டிகரிலுள்ள ஒரு உணவகத்தில் இரண்டு வாழைப் பழங்களை ரூ. 442க்கு தனக்கு விற்றது குறித்து ராகுல் போஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திருந்தார். இந்தச் சம்பவத்தில் தவறேதும் இல்லையென்று இந்திய ஹோட்டல் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தாலும், வணிகவரித்துறையினர் அந்த சம்பவத்திற்கு ரூ.25,000 அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெறும் இரண்டு முட்டைகளுக்கு ரூ.1.700 வசூலித்த சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
Last Updated : Aug 12, 2019, 8:50 PM IST