பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிந்து வந்தவர் ஆனந்த்குமார் பாண்டே. இவர், தனது மகளுடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக டெல்லிக்குச் சென்றுள்ளார்.
அங்கு ஐஎல்பிஎஸ் (The Institute of Liver and Biliary Sciences) சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் சுமார் 22 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.
சிகிச்சையில் இருந்த ஆனந்த்குமார் பாண்டே, திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து, உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது உடலை கொண்டு செல்ல வேண்டுமெனில், மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய 3.50 லட்சம் ரூபாய் பணத்தை கட்டிவிட்டு, உடலை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆனந்த்குமார் பாண்டேவின் குடும்பத்தினர் செய்வது அறியாது திகைத்து நின்றனர். இதுதொடர்பாக ஆனந்த்குமார் பாண்டேவின் மகள் கூறியதாவது, "சிகிச்சையின் செலவைச் சுமக்க நாங்கள் ஏற்கனவே எங்கள் சொத்துக்கள், பொருள்களை விற்றுவிட்டோம்.