கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மதியத்துக்குள் நடத்த அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் வார்த்தைப் போர் நிகழ்ந்துவந்தது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் ஸ்ரீநிவாஸ் கவுடா, "எனக்கு ரூ.5 கோடி வழங்க பாஜவினர் முயன்றனர். ஆனால் நான் வாங்க மறுத்தேன். பின்னர், ரூ.30 கோடி வரை பேச்சுவார்த்தை நடத்தினர்" என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.