மத்திய பிரதேச மாநிலம் சியோனி பகுதியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முஸ்லிம் இளைஞரும் பெண் ஒருவரும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
'முஸ்லிம் இளைஞர் தாக்கப்பட்டதற்கு நடவடிக்கை தேவை' -மெகபூபா முஃப்தி - bjp
ஸ்ரீநகர்: மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தில் முஸ்லிம் இளைஞர் தாக்கப்பட்டதற்கு, அம்மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
மெகபூபா முப்தி
வட இந்தியாவில் இது போன்று மாட்டிறைச்சி தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வரும்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முஃப்தி "அப்பாவி முஸ்லீம்கள் தாக்கப்படுவதை பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய பிரதேச அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.