கர்நாடக மாநிலம், பெஸ்தமனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளன. இவர் பெங்களூரு - மைசூர் சாலையில் உள்ள தனியாருக்குச் செந்தமான ஹோட்டலுக்கு தனது கார் ஒட்டுநருடன் சென்றுள்ளார். அப்போது அந்த ஹோட்டலின் முற்றத்தில் வைத்து நேற்றிரவு (ஜூலை 31) 7.30 மணிக்கு சுனிலை ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியது.
ரவுடி ஒருவரை சரமாரியாக வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியீடு! - கொடூரமாக கொலை செய்யப்பட்ட ரவுடி
பெங்களூரு: பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஒருவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.
இதிலிருந்து சுனிலை கார் ஒட்டுநர் காப்பாற்ற முயன்றார். ஓட்டுநரையும் அக்கும்பல் தாக்கியது. இதில் அவர் கடுமையாக காயமடைந்தார். பின் அக்கும்பல் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து சுனிலை சரமாரியாக தாக்கியது. இதில் சுனில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஹோட்டலில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது இந்தக் காட்சிகளை வைத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.