ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாலமநேரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, முன்னால் சென்ற பைக் மீது மோதி நின்றுள்ளது. அப்போது, பின்னால் வந்த கார், லாரி சடன் பிரேக் போட்டதால் லாரியின் மீது மோதியது. அடுத்தடுத்து நடத்த இந்த விபத்தால் நெடுஞ்சாலை ஸ்தம்பித்து போனது.
ஆந்திராவில் கொடூர விபத்து... லாரி, கார், பைக் மோதலில் ஸ்தம்பித்த நெடுஞ்சாலை! - Andhra accident
அமராவதி: பாலமநேரு தேசிய நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து இடித்துக்கொண்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பயங்கர சாலை விபத்தில் காரில் பயணித்த மூன்று பேரும், பைக்கிலிருந்த ஒருவர் என நான்கு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடல்களை மீட்டு வருகின்றனர்.
மேலும், இறந்தவர்களின் விவரங்களை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர் பங்கரபாளையத்தைச் சேர்ந்த பாபு (45) என அடையாளம் காணப்பட்டது. காரில் பயணித்தவர்கள் வெங்கடேஸ்வர் ரெட்டி (29), ரத்னம்மா (49), சீனிவாசுலு ரெட்டி (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.