மகாராஷ்டிரா தானேவின் ரபோடி பகுதியில் எம்என்எஸ் கட்சி தலைவர் ஜமீல் ஷேக் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் பின்னால் பைக்கில் வந்த இரண்டு பேர், திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள், அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் மரணம் தொடர்பான தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.
பட்டப்பகலில் எம்என்எஸ் கட்சி தலைவர் சுட்டுக்கொலை... சிசிடிவி காட்சி வெளியீடு! - MNS leader shot in head
மும்பை: பட்டப்பகலில் பைக்கில் சென்று கொண்டிருந்த எம்என்எஸ் கட்சி தலைவர் ஜமீல் ஷேக்கை, அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஜமீல் பின்னால் பைக்கில் வந்த நபர்கள் முதலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால், அந்த குண்டு ஜமீல் மீது படவில்லை என தெரிகிறது. உடனடியாக, மீண்டும் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் பைக்கிலிருந்து கீழே விழுந்தார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.