தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

”தீபாவளியன்று துயரத்தின் இருள் நீங்கும்” - சோனியா காந்தி நம்பிக்கை - ராகுல் காந்தி

டெல்லி : தீபாவளித் திருவிழா தொற்றுநோய், பொருளாதார மந்தநிலை, துயரத்தின் இருள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் என்று நம்புவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி

By

Published : Nov 14, 2020, 6:48 PM IST

இந்த மகிழ்ச்சியான தீபாவளி நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள சோனியா காந்தி, தேசத்தை முன்னேற்றம், நல்லிணக்கம், செழிப்புப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

"இந்தத் திருவிழாவில், இந்தியாவையும் நம் இதயங்களையும் ஒளிரச் செய்யும் ஒரு மில்லியன் விளக்குகள், தொற்றுநோய், பொருளாதார மந்தநிலையின் இருள், சக குடிமக்களுக்கு ஏற்படும் துயரங்கள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவரும்" என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் பண்டிகையைக் கொண்டாடும்போது தொற்றுநோய் தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தனது தீபாவளி வாழ்த்துகளை மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details