தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் கேர்ஸ் நிதியை பொது நிதியாக மாற்ற வேண்டும் - அகிலேஷ் யாதவ்

லக்னோ: பிரதமர் கேர்ஸ் நிதியை பொது நிதியாக நேர்மையாக மாற்றி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

akil
kil

By

Published : Sep 23, 2020, 10:22 PM IST

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல் பேரணிகளுக்காக மில்லியன் கணக்கான எல்.ஈ.டி. டிவிகளை நிறுவுவதன் மூலம் பில்லியன் கணக்கான பணத்தை விளம்பரங்களுக்கு செலவழித்த தற்போதைய அரசாங்கத்திற்கு, மாணவர்கள், ஆசிரியர்களின் ஆன்லைன் கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்ய நிதி இல்லையா? பாஜக அரசு நேர்மையாக பி.எம் கேர்ஸ் ஃபண்டை பொது நிதியாக மாற்ற வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு ட்வீட்டில், " கரோனா தொற்று காலத்தில் பள்ளிகளை திறப்பது சரியான முடிவு இல்லை. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவனுக்கும் மின்சார வசதி, ஒரு ஸ்மார்ட்போன், நெட்வொர்க் ஆகியவற்றை அரசாங்கம் வழங்க வேண்டும்.

மேலும், ஆசிரியர்களுக்கு ஆன்லைன் கல்விக்குத் தேவையான வசதியும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மாணவர்களின் நலன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து பாஜக அரசு ஆலோசிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details