கரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பல்வேறு தரப்பினர் பிரதமர் நிவாரண தொகையில் நிதி செலுத்தியுள்ளனர். இந்தத் தொகையிலிருந்து 3,100 கோடி ரூபாய் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதில், 2,000 கோடி ரூபாய் வென்ட்டிலேட்டர்கள் வாங்குவதற்காகவும் 1,000 கோடி ரூபாய் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, மத்திய அரசின் திட்டங்கள் கடைநிலை வரை சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்ய நேர்மையான அவசர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.