தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அமித் ஷா குண்டர் மொழியில் பேசுகிறார்'- பூபேஷ் பாகல் - ராகுல்

ராய்ப்பூர்: ராகுல் காந்தி குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், “இதுபோன்ற மொழிகளை குண்டர்கள், குற்றவாளிகள்தான் பிரயோகிப்பார்கள் என கூறியுள்ளார்.

Chief Minister Bhupesh Baghel Amit Shah Indo-China conflict Rahul Gandhi do-do haath ho jayein குண்டர் மொழி அமித் ஷா பூபேஷ் பாகல் ராகுல் இந்தியா சீனா சச்சரவு
Chief Minister Bhupesh Baghel Amit Shah Indo-China conflict Rahul Gandhi do-do haath ho jayein குண்டர் மொழி அமித் ஷா பூபேஷ் பாகல் ராகுல் இந்தியா சீனா சச்சரவு

By

Published : Jun 29, 2020, 12:19 PM IST

ராஜஸ்தான் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பி.எம். கேர் (பிரதம மந்திரி நிவாரண நிதி) மூலமாக பிரதமர் நரேந்திர மோடி ஒன்பது ஆயிரத்து 678 ரூபாய் நிதி திரட்டியுள்ளார். சீன நிறுவனங்கள் ஒருபுறம் நிதி அளித்துவிட்டு மறுபுறம் இந்திய எல்லையில் ஊடுருவுகின்றன.

சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி சில கட்டுமானங்களை வேறு அமைத்துள்ளனர். இதனை வெளியுறவுத் துறை அமைச்சரே கூறியுள்ளார். ஆனால் மறுபுறம் பிரதமர் மோடி இதற்கு முரணாக பேசுகிறார். சீனர்களின் ஊடுருவலை மறுக்கிறார்.

இதற்கிடையில் அமித் ஷா 1962ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை இந்தியா-சீனா சச்சரவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஒத்தைக்கு ஒத்தை விவாதிக்கலாம் என ராகுல் காந்தியிடம் சவால்விடுத்துள்ளார். இது கண்டனத்துகுரியது. அவர் குண்டர்கள், குற்றவாளிகள் பிரயோகிக்கும் குண்டர் மொழியை பயன்படுத்துகிறார்” என்றார்.

முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சவால் விடுத்து பேசிய அமித் ஷா, “இந்தியா சீனா விவகாரம் குறித்து ஒத்தைக்கு ஒத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாரா? என்றார்.

மேலும், ராகுல் காந்தியின் சரண்டர் மோடி கோஷத்தை சீனாவும், பாகிஸ்தானும் ஆதரிக்கின்றன. நாட்டுக்கு எதிரான எத்தனை பெரிய பரப்புரைகளையும் எதிர்கொள்ளும் முழு பலம் மத்திய அரக்கு உள்ளது எனவும் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details