தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவ படிப்பிற்காக 10,000 இடங்கள் அதிகரிக்கப்படும் - அமித் ஷா - இந்தியா பொது சுகாதாரம்

டேராடூன்: அடுத்தாண்டிற்குள் மருத்துவ படிப்பிற்காக 10 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Amit
Amit

By

Published : Mar 15, 2020, 6:08 AM IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரகான்ட் மாநிலத்திற்கு நேற்று பயணம் மேற்கொண்டார். அங்குள்ள எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்கள் வழங்கினார்.

விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவப்படுத்தியபின் அவர்களிடம் உரையாற்றிய அமித் ஷா, பாஜக தலைமையிலான ஆட்சியில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் நாடுமுழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 29 ஆயிரமும், முதுகலை படிப்பிற்கான இடங்கள் 17, ஆயிரமும் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அடுத்தாண்டிற்குள் மருத்துவ மேற்படிப்பிற்கான இடங்கள் மேலும் 10 ஆயிரம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு செயல்பட்டுவருவதாகவும் அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமணையை அமைப்பதே மத்திய அரசின் லட்சியம் எனவும் தெரிவித்தார்.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் பொது சுகாதாரத்தில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் மாநில முதலமைச்சர் திரிவேந்திரா சிங்கும் பங்கேற்றார்.

இதையும் படிங்க:கொரோனா எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details