இந்தியாவில் பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். நாட்டிற்காகப் போராடி வீர மரணம் அடைந்ததால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என மக்களால் இன்றும் அழைக்கப்படுகிறார்.
இவரின் பிறந்தநாளை இன்று (செப்.28) அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில்,
"தனது புரட்சிகர சிந்தனைகள், தியாகத்தின் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய வழிநடத்துதல்களை வழங்கியவர் பகத்சிங். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நாட்டின் சுதந்திரம் குறித்த புரிதலை இளைஞர்களிடம் ஏற்படுத்தியவர். இந்திய மக்களுக்கு அவர் எப்போதும் முன்மாதிரியாக இருப்பார்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மனதின் குரல் உரையில் வில்லுப்பாட்டை புகழ்ந்த பிரதமர் மோடி!