கடந்தாண்டு சீக்கிய மத நிறுவனர் குருநானக் தேவ்-இன் 550ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு செல்ல ஏதுவாக கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள சீக்கியர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஷிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாடலும், அவரது கட்சியை சேராத சீக்கிய குருத்வாரா பர்பந்தக் குழு உறுப்பினர்களும் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.