தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆண் குழந்தைக்கு, 'கரோனா' என பெயரிட்ட ஊர்க்காவல் படை வீரர்! - குழந்தைக்கு கரோனா என பெயரிட்ட காவலர்

லக்னோ: கரோனா எதிர்ப்பு பணியில் இருக்கும் போது பிறந்த தனது மகனுக்கு உத்தரப் பிரதேச ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் கரோனா என பெயரிட்டுள்ளார்.

Home guard in UP  Home guard names son 'Corona'  Newborn named Corona in UP  Uttar Pradesh news  ஆண் குழந்தைக்கு, 'கரோனா' என பெயரிட்ட ஊர்க்காவல் படை வீரர்!  குழந்தைக்கு கரோனா என பெயரிட்ட காவலர்  உத்தரப் பிரதேசத்தில் கரோனா பாதிப்பு
Home guard in UP Home guard names son 'Corona' Newborn named Corona in UP Uttar Pradesh news ஆண் குழந்தைக்கு, 'கரோனா' என பெயரிட்ட ஊர்க்காவல் படை வீரர்! குழந்தைக்கு கரோனா என பெயரிட்ட காவலர் உத்தரப் பிரதேசத்தில் கரோனா பாதிப்பு

By

Published : Apr 5, 2020, 10:47 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் பில்தாரா காவல்நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக ரியாசுதீன் என்பவர் பணிபுரிந்துவருகிறார். கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், இவர் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் பிரசவ வலியால் துடித்த ரியாசுதீனின் மனைவியை, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குக் கரோனா என்று ரியாசுதீன் பெயரிட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “எனக்கு வெள்ளிக்கிழமை இரவு பிறந்த மகனுக்கு கரோனா என பெயரிட்டுள்ளேன். தற்போதைய காலங்களில் உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்திவருகிறது.

இதனை எதிர்த்து உலக மக்கள் அனைவரும் போராடுகின்றனர். ஆகவே மக்கள் இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து விடுபடவும், விழிப்புடன் இருக்கவும் கரோனா என பெயரிட்டுள்ளேன்” என்றார்.

இதையும் படிங்க: கோவிட்-19 பாதிப்பு - மகாராஷ்டிராவை நெருங்கும் தமிழ்நாடு!

ABOUT THE AUTHOR

...view details