தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹோலி பண்டிகையை வண்ணங்களால் அலங்கரித்த கூகுள்! - இந்தியா

டெல்லி: நாடு முழுவதும் இன்று இரண்டாவது நாளாக ஹோலிப் பண்டிகை கோலகலமாக கொண்டப்பட்டுவருகிறது. கூகுள் ஹோலி பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக தனது டூடுலை வண்ணங்களால் அலங்கரித்துள்ளது.

holi

By

Published : Mar 21, 2019, 10:08 AM IST

அரங்க பஞ்சமி என்று அழைக்கப்படும் ஹோலி பண்டிகை இளவேனிற்காலத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தியா மட்டுமில்லாது, நேபாளம், வங்கதேசம், மொரீசியஸ், திரினிதாத் போன்ற இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் கொண்டாடப்பட்டுவருகிறது.

இதில் வயது வித்தியாசமின்றியும் ஆண்-பெண் பேதமின்றியும் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வண்ணங்களைப் பூசி மகிழ்ச்சியையும், அன்பையும் பரிமாறி ஹோலி பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடிவருகின்றனர்.

ஹோலிப் பண்டிகையின் இரண்டாவது நாளாக இன்றும் நாடு முழுவதும் மிக விமரிசையாக விழா கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்நிலையில் கூகுள் ஹோலி பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக தனது டூடுலை வண்ணங்களால் அலங்கரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details