தலைநகர் டெல்லியில் உள்ள தில்லி ஹாட் அரங்கில் தேசிய பழங்குடி விழாவான ஆடி மஹோட்சவத்தின் தொடங்க விழா நேற்று நடைபெறப்பட்டது.
மத்திய பழங்குடியின விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா தலைமையேற்று நடத்திய இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய அமித் ஷா, "ஆதிவாசிகளின் நலனுக்கே மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஆதிவாசிகளின் காடுகளை அழித்து, அவர்களை கல்வியறிவு பெறவிடாமல் செய்து இருளில் தள்ளியது. கடந்த 70 ஆண்டுகளில் ஆதிவாசிகள் வெறும் வாக்கு வங்கிகளாகவே பார்க்கப்பட்டன. ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் அவர்களுக்குத் தேவையான கல்வி, வீடு என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன" என்றார்.
15 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த ஆடி மஹோட்சவ விழாவில், 27 மாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஈடிவி பாரத் ஊடகத்துக்குப் பேட்டியளித்த மத்திய பழங்குடியின விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா, "இந்த தளம் பெண் கலைஞர்களுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வருபர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமையும். இதுபோன்ற தளங்களை நாம் ஊக்குவித்து, பிரதமர் நரேந்திர மோடியின் கனவை முன்னெடுத்துச் செல்லவேண்டும்" எனத் தெரிவித்தார்.
தேசிய பழங்குடியின தொடங்க விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பழங்குடியின சமூகங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் வாசிங்க : ஏடிபி பைனல்ஸ்: ஸ்வெரவ்-வை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் தீம்!