ஹோலி பண்டிகை வரும் 9, 10ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அப்பண்டிகையில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில், உலகை உலுக்கும் கொரோனாவால்தான் ஹோலி பண்டிகையில் கலந்துகொள்ளப்போவதில்லை எனவும் பொதுவெளியில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது ட்விட்டரில், "ஹோலி பண்டிகை இந்தியர்களான எங்களுக்கு மிக முக்கியமான பண்டிகை, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தாண்டு ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவுசெய்துள்ளேன்.