ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்):கரோனா நோய்த் தொற்று அதிகரித்திருந்த காலத்தில், 34 எச்.ஐ.வி பாதித்த கர்ப்பிணிகள் நோயற்ற குழந்தைகளை தங்கள் மருத்துவமனையில் ஈன்றெடுத்துள்ளதாக லேடி எல்ஜின் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தங்கள் மருத்துவமனையில், எச்.ஐ.வி பாதித்த 34 கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு எந்த விதமான நோய்த் தொற்றும் கண்டறியப்படவில்லை என மருத்துவமனை உறுதிப்பட தெரிவித்திருக்கிறது.
கடந்த 26 மாதத்தில் 135 பெண்கள் எச்.ஐ.வி பாதிப்பால் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதில், 34 கர்ப்பிணிகளும் அடங்குவர்.