தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குறுகிய காலத்தில் அதிகரித்த பயனர்கள் - உலக சமூக ஊடக தினம் ஸ்பெஷல்!

மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்களை கவுரவிக்கும் விதமாக உலகம் முழுவலும் இன்று (ஜூன் 30) சமூக ஊடக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

social
social

By

Published : Jun 30, 2020, 10:25 PM IST

சமூக ஊடகம் (Social Media) என்ற வார்த்தை பலரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தித்தாள் படித்தும், தொலைக்காட்சி பார்த்தும் அன்றாட தினத்தை செலவிட்டு வந்தவர்களை சமூக ஊடகம் தலைகீழாக மாற்றியுள்ளது. பேஸ்புக், டிவிட்டர் போன்ற செயலிகள் வாழ்கையின் அங்கமாகவே மாறியுள்ளன. இது மட்டுமின்றி செய்திகளை விரைவாகத் தருவதில் சமூக ஊடகத்தை யாராலும் முந்த முடியாது. உலகில் ஒரு மூலையில் நடக்கும் சம்பவத்தின் புகைப்படத்தையும் காணொயையும் அடுத்த மூலைக்கு எளிதாக கொண்டு செல்ல சமூக ஊடகங்கள் உதவியாக இருக்கின்றன.

இத்தகைய நன்மைகள் நிறைந்த சமூக ஊடகங்களில் கண்ணுக்குத் தெரியாக குற்றங்களும் அதிக அளவில் நடைபெறுகின்றன. ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை எளிதாகத் திருடுகின்றனர். பெண்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்ட புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கான விழிப்புணர்வுகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

உலகளவில் 3.81 பில்லியன் மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். இதில், இந்தியாவில் மட்டும் 574 மில்லியன் மக்கள் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். வரும் 2020 டிசம்பருக்குள் இந்தியாவில் சுமார் 639 மில்லியன் பயனர்கள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (99 விழுக்காடு) முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் தினசரி வீதம், இணையப் பயனர்கள் சமூக ஊடகங்களை 144 நிமிடங்கள் சராசரியாகப்பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு, மக்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்தேடுத்து அறிந்து கொள்ள உதவும் சமூக ஊடகங்களை கொண்டாடும் வகையில், உலகம் முழுவதும் சமூக ஊடக நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. #SocialMediaday

ABOUT THE AUTHOR

...view details