தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவர் டெபன் தத்தாவின் படுகொலையில் வரலாற்று தீர்ப்பு!

ஜோர்ஹாட்: மருத்துவர் டெபன் தத்தாவை கும்பல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 24 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

By

Published : Oct 21, 2020, 2:08 AM IST

அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட மருத்துவர் டெபன் தத்தா படுகொலை செய்யப்பட்டதற்காக ஜொர்ஹாட் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி நீதிமன்றம் தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு மரண தண்டனையும், 24 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது. அக்டோபர் 13ஆம் தேதி, மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில், ஜோர்ஹாட் நீதிபதி ராபின் புக்கான், 25 தேயிலை தோட்டத் தொழிலாளர்களை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

இந்தக் கொடூரமான கொலைக்கு முக்கியக் காரணமாக இருந்த குற்றவாளி சஞ்சய் ராஜோவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. மேலும் சஞ்சிப் ராஜோவர், சுரேஷ் ராஜோவர், அஜோய் மஜி, உபேந்திர பூமிஜ், ரதுல் ராஜோவர், பாப்லு ராஜோவர், அனில் மஜி, பிஜோய் ராஜோவர், போலின் ராஜோவர், தீபக் ராஜோவர், மிலன் ராஜோவர், ரிங்கு மிலாஜி, மஹாலி, தேபேஸ்வர் ராஜோவர், கார்த்திக் பூமிஸ், சஞ்சோய் ராஜோவர், கலிச்சரன் மஹாலி, ராமேஸ்வர் பூமிஸ், சிபா மஹாலி, ராகுல் ராஜோவர், கலனாக் மஜி, மனோஜ் மஜி, ரிங்கு பக்தி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

மருத்துவர் டெபன் தத்தா கொலை செய்யப்பட்டு 22 நாள்களுக்குப் பிறகு 32 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது 602 பக்க குற்றப்பத்திரிகையை ஜோர்ஹாட்டின் தலைமை நீதித் துறைக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

சோம்ரா மஜி என்ற தொழிலாளி இறந்ததைத் தொடர்ந்து, தேக் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஒரு பிரிவு 73 வயதான தத்தா மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அமலாக்கத்துறையை வைத்து அப்துல்லாவை மிரட்டும் மத்திய அரசு - சீதாராம் யெச்சூரி

ABOUT THE AUTHOR

...view details