ஈராக் நாட்டில் உள்ள பழமையான மோசூல் நகரத்தை இஸ்லாமிய அரசு கைப்பற்றியது. இஸ்ஸாமியர்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்த மோசூல் நகரத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்றது. சுமார் 9 மாதம் நீடித்த பயங்கர தாக்குதலில், வரலாற்று சின்னமான மோசூல் நகரம் சுக்குநூறாக நொறுங்கியது. அப்பகுதியிலிருந்த வீடுகள் அனைத்தும் வெடிவிபத்தில் சிதறிப் போர் முடிந்த பகுதிபோல் காட்சியளித்தன.
இந்நிலையில், பாதிப்பான மோசூல் நகரம் புதிய திட்டத்தின் மூலம் புதிய பொலிவை பெற்றுள்ளது. நகரத்தில் உள்ள அனைத்து விடுகளுக்கும் நிலநிற வண்ணம் பூசப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி மலர் பானைகள், பறவைகளுக்கான இல்லங்கள், சுவர்களில் ஒவியங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த மாறுதலை நகரம் மோசமாக சேதமடைந்த பின்னர் மறுபிறப்பின் அடையாளமாக அப்பகுதி மக்கள் பார்க்கின்றனர். இந்த மாற்றத்தை கொண்டு வந்ததில் மோசூல் சுற்றுப்புறத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அதிகளவில் பங்கு உள்ளது.