அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள வனவிலங்கு பூங்காவில் மான்கள், புலிகள், குரங்குகள் உள்பட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள விலங்குகளுக்கு உணவாக மாட்டிறைச்சி வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று, வனவிலங்கு சரணாலயம் முன்பு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் சரணாலயத்திற்கு இறைச்சி ஏற்றி வரும் வாகனத்தை தடுத்து நிறுத்தி, மாட்டிறைச்சியை விலங்குகளுக்கு வழங்கக்கூடாது என கண்டன முழக்கங்களை ஏழுப்பினர்.
இந்தப் போராட்டத்தின் போது, மாட்டை நாங்கள் தெய்வமாக பார்க்கிறோம் என்றும் எந்தவிதமான விலங்குகளுக்கும் மாட்டிறைச்சி வழங்குவதை அனுமதிக்க முடியாது எனக் கூறினர்.
இதையடுத்து, அங்கு விரைந்த அஸ்ஸாம் மாநில வனவிலங்கு சரணாலயம் ரேஞ்சர், எங்கள் நிபுணர்களால் விலங்குகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். விலங்குகளின் தன்மைக்கேற்ப தான் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விலங்குகளின் ஊட்டச்சத்துக்கு மாட்டிறைச்சி அவசியம்" என எடுத்துரைத்தார்.
இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சமூக இடைவெளியைப் பின்பற்றாத மாட்டிறைச்சிக் கடைக்குச் சீல்வைப்பு