ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டப்பட்டு வருகிறது. மக்கள் ஒருவருக்குவொருவர் வண்ணப்பொடிகளை பூசிக்கொண்டும், வண்ணப்பொடிகள் கலந்த தண்ணீர் பந்துகளை வீசியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வடமாநிலத்தவரின் முக்கிய பண்டிகையான ஹோலி பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கராச்சியில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்துக்கள்
கராச்சி: பாகிஸ்தானில் இந்துக்கள் ஹோலி பண்டிக்கை வெகுவிமர்சையாக கொண்டாடினர். இந்துக்கள் மட்டுமல்லாமல் முஸ்லீம்களும் இதில் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வண்ணப்பொடிகளை பூசிக்கொண்டனர்.
இந்தியாவை போல் பாகிஸ்தானிலும் ஹோலி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி மாநகரில் வசிக்கும் இந்துக்கள் அங்குள்ள இந்து கோவில்கள் மற்றும் நாராயணசாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் திரண்டு வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசிக் கொண்டும், வண்ணப்பொடிகள் கலந்த தண்ணீர் பந்தை வீசியும் கொண்டாடினர்.
இந்த பண்டிகையில் இந்துக்களை தவிர அந்த பகுதியில் உள்ள முஸ்லீம்களும் கலந்துக் கொண்டு வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டனர். மேலும் இந்து மக்கள் முஸ்லீம் மக்களுக்கு இனிப்புகளை பரிமாறினர். ஹோலி பண்டிகையால் கராச்சி நகர் முழுவதும் வண்ணமயமாக காட்சியளித்தது.