தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இடிந்து விழுந்த மசூதியைக் கட்ட ஒன்றிணைந்த இந்து மக்கள் - இடிந்த மசூதியை கட்ட ஒன்றிணைந்த இந்து மக்கள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தில் புதிய மசூதி ஒன்றைக் கட்ட இந்து - இஸ்லாமிய மதத்தினர் ஒன்றிணைந்தனர்.

Hindu swamiji drive to new mosque construction
Hindu swamiji drive to new mosque construction

By

Published : Jan 23, 2020, 3:18 PM IST

இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக, கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராம்புரா கிராமத்தில் உள்ள ஒரு பழைய மசூதி இடிந்து விழுந்தது. இதனை அறிந்த இந்து சுவாமிஜி மசூதி இடிந்த இடத்தைப் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து மகாநந்த சுவாமி என அழைக்கப்பட்ட அவர், அந்த இடத்தில் பூமி பூஜை செய்து புதிய கட்டுமானத்தை எழுப்ப மசூதியின் ஒரு சிறுபகுதியை மண்வெட்டியால் இடித்து எடுத்துக்கொடுத்தார். இதைத் தொடர்ந்து மசூதி கட்டுமானம் புத்துயிர் பெற்றது. அப்போது இந்து மதத்தைச் சேர்ந்த பலரும் அவ்விடத்திலிருந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக ராகுல் காந்தியின் முதல் பேரணி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details