தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலர் தின சிறப்புச்சலுகை அறிவித்த கடைகள் - புதுச்சேரியில் மிரட்டிய இந்து முன்னணியினர்! - காதலர் தினம்

புதுச்சேரி: காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வியாபார நிறுவனங்கள் வைத்திருந்த பேனர்களை இந்து முன்னணியினர் அகற்றச் சொல்லியதால் பரபரப்பு ஏற்பட்டது.

munnani
munnani

By

Published : Feb 14, 2020, 5:26 PM IST

புதுச்சேரியில் காதலர் தினத்தை முன்னிட்டு, காமராஜர் சாலையில் உள்ள பிரியாணிக்கடையில் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனையறிந்த இந்து முன்னணியினர் 20க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு, காதலர்களை அங்கிருந்து வெளியில் அனுப்பி, பொருட்களை சேதப்படுத்தி, உணவக மேலாளருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் இன்று அந்த உணவகம் திடீரென மூடப்பட்டது.

இதேபோல், புதுச்சேரியிலுள்ள பிரபல நகைக்கடைகளில் காதலர் தினத்தை முன்னிட்டு, காதலர்களை வரவேற்கும் விதமாக பேனர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதனையடுத்து நகைக்கடை முன் திரண்ட இந்து முன்னணியினர், அவற்றை அகற்றச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. பின் அந்த பேனர்கள் உடனே அகற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காதலர் தின சிறப்புச் சலுகை - மிரட்டிய இந்து முன்னணியினர்!

காதலர் தினத்தன்று எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதுச்சேரி கடற்கரை, பாரதிப் பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகுக் குழாம் உள்ளிட்டப் பகுதிகள் அனைத்தும் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டன. பிற்போக்குத்தனமாக இந்து முன்னணி உள்ளிட்ட வகுப்புவாத அமைப்புகள் காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் கடைகளையும், அங்கு வருபவர்களையும் அச்சுறுத்துவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.

இதையும் படிங்க: காதலர் தினத்தில் உதயமான காதல் - க்யூட் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details