கோவிட்-19 வைரஸ் தொற்று, தற்போது இத்தாலி, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவிவருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் விதமாக கோமிய விழாவை ஹிந்து மகா சபா டெல்லியில் நடத்தியது.
இந்த விழா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மகாசபாவின் தலைவர் சக்கரபாணி மகராஜ், "பலரை தாக்கிவரும் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடவே இந்த கோமிய விழா நடத்தப்பட்டது.