தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுநீரகம் மூலம் இந்து-முஸ்லிம் நல்லிணக்கம் வளர்த்த சம்பவம் - முஸ்லிம்

மும்பை: சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த ராம்ஸ்வரத்துக்கு நஷ்ரீன் என்பவர் சிறுநீரகம் கொடுத்து உதவியது பெரும் பாராட்டை பெற்றுவருகிறது.

இந்து

By

Published : Mar 18, 2019, 11:46 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தானே பகுதியைச் சேர்ந்த தம்பதி நதீம்-நஷ்ரீன். இதில் நதீம் நான்கு வருடங்களாக சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டுவந்தார்.

பிகார் மாநிலத்தைச்சேர்ந்த தம்பதி ராம்ஸ்வரத்-சத்யாதேவி. இதில் ராம்ஸ்வரத்து, நதீம் போலவே சிறுநீரக பிரச்னையால் சிரமப்பட்டுவந்துள்ளார்.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ஷா, இவர்களுக்கு ஸ்வாப் மாற்று சிகிச்சையை பற்றி அறிமுகம் செய்துள்ளார்.

ஸ்வாப் மாற்று சிகிச்சை என்பது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு உறுப்பு அளித்து உறுப்பு வாங்குவது ஆகும்.

எனவே, சத்யாதேவி நதீமுக்கும், நஷ்ரீன் ராம்ஸ்வரத்துக்கும் சிறுநீரகத்தை வழங்கி அன்புக்கு மதமில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.

வடஇந்தியாவில்இந்துக்கள்-முஸ்லிம்களுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நேரத்தில் இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்துக்கு முன்னுதாரமாக உள்ளது.


ABOUT THE AUTHOR

...view details