17ஆம் மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜகவுக்கு தமிழ்நாடு மட்டும் படுதோல்வியைப் பரிசளித்தது. பாஜக அரசு முந்தைய ஆட்சியில் தமிழகத்தை ஒடுக்கியதே இதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஒகி புயல், கஜா புயல் என தமிழ்நாடு மாபெரும் இழப்பை சந்தித்தபோது மத்திய அரசு கண்டும்காணமல் இருந்தது. பிரதமர் மோடி மீது தமிழ்நாடு மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது தமிழ்நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
மீண்டும் இந்தித் திணிப்பு: பாஜக ஆட்டம் ஆரம்பம்! - bjp
டெல்லி: நாடு முழுவதும் நடுநிலை வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருகிறது.
ஆட்சியை பிடித்த உடனயே மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த பாஜக முடிவு செய்திருக்கிறது. நாடு முழுவதும் நடுநிலை வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருகிறது என மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி அல்லாத அனைத்து மாநிலங்களிலும் இனி இந்தி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாஜக கடந்த ஆட்சியிலும் தீவிரமாக இந்தித் திணிப்புக்கு முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாட்டுக்குத் தனி வரலாறு உண்டு. இந்த அறிக்கை மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.