இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி பகுதியில் வசிக்கும் கல்பனா தாக்கூர், பிளாஸ்டிக்கை அப்புறப்படுத்த தனித்துவமான ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். இந்தச் சிறந்த முயற்சியின் மூலம், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, அதிலிருந்து அழகிய கலைப்பொருள்களை கல்பனா உருவாக்குகிறார். கல்பனா லாகஹவுல் சிப்பிட் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால், இவர் கடந்த பல ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் மணாலியில் வசித்துவருகிறார்.
இது குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா, "பெரிய அளவிலான நெகிழிக் கழிவுகளை நாம் உற்பத்தி செய்கிறோம் என்பது எனக்குத் தெரியும். தினமும் எங்கள் குப்பைத்தொட்டி நெகிழிக் கழிவுகளால் நிரம்பியிருக்கும். இதுவே நெகிழியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து என்னை சிந்திக்கவைத்தது" என்றார். மணாலியில் நெகிழிப் பொருள்களை அரசுதடைசெய்தவுடன் தான் பல சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் கல்பனா கூறினார்.